டில்லி

க்களின் விருப்பத்தை அறிய டிவி செட் டாப் பாக்ஸில் அரசு சிப் பொருத்த உள்ளதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது.

தற்போது டிவியில் பல நிகழ்ச்சிகள் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.   எந்த சேனலில் அதுவும் குறிப்பாக எந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து தனியார் நிறுவனங்கள் ஆராய்ந்து முடிவுகளை வெளியிடுகின்றன.  இந்நிலையில் மத்திய அரசு டிவி செட் டாப் பாக்ஸ் களில் சிப் ஒன்றை பொருத்தி மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பற்றி தெரிந்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதித்துள்ளது.   மக்களை வேவு பார்க்கும் நடவடிக்கை எனவும் இந்த ஆய்வின் முடிவுகளை பாஜக அரசியல் ரீதியாக தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.    இந்த நடவடிக்கை இன்னும் பரிசீலிக்கப்படாத நிலையில் உள்ளது.   எனவே இப்போதே காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவிக்க விரும்புகிறது என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் மூத்தல் தலைவர் ரண்தீப் சிங் தனது டிவிட்டரில், “ மத்டிய பாஜக அரசு அடுத்த வேவு பார்க்கும் வேலையை தொடங்கி உள்ளது.  இது தனியார் உரிமையை மீறுவதாகவும் தனி நபர் ரகசியங்களை அறிந்துக் கொள்ள முயல்வதும் ஆகும்.   நான்கு சுவர்களுக்குள் நடப்பதை அறிவதோ மற்றும் படுக்கை அறையில் எட்டிபார்ப்பதோ அரசுக்கு அழகல்ல.    மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மக்கள் ஆர்வம் கொண்டுள்ளது எந்த நிகழ்ச்சி என அறிந்துக் கொள்ள விரும்பலாம்.   ஆனால் மத்திய அரசின் நோக்கம் அது இல்லை” எனப் பதிந்துள்ளார்.