அருணாச்சலபிரதேசம்: மீண்டும் கோட்டை விட்டது  காங்கிரஸ்! கூண்டோடு கட்சித் தாவல்!!

டில்லி,
காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆளும் அருணாசல பிரதேசத்தில் கூண்டோடு அனைவரும் மாநில கட்சிக்கு மாறியது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது
அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக நிலவிவந்த கடும் குழப்பங்களின் உச்சகட்டமாக கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ஒரு மாநிலக்கட்சிக்கு தாவியுள்ளனர். கட்சித்தாவியவர்களுள்  மாநில முதல்வர் பெமா கண்டுவும் ஒருவர்.
2aruna
கட்சியில் இன்னும் நிலைத்திருக்கும் ஒரே ஒருவர் முன்னாள் முதல்வரான நபம் துகி ஆவார். இவர் சமீபத்தில்தான் பெமா கண்டுவிடம் தனது முதல்வர் பதவியைப் பறிகொடுத்தார். கட்சித் தாவிய அனைவரும் லோக்கல் பீப்பிள்ஸ் பார்ட்டி என்ற மாநிலக் கட்சிக்கு தாவியுள்ளனர். இக்கட்சி பாஜகவின் தோழமைக் கட்சி ஆகும்.
 60 உறுப்பினர்களைக் அருணாச்சல் கொண்டுள்ள சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 47 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 11 பேரும் சுயேட்சைகள் இருவரும் இருந்தனர். ஆக இப்போது இருக்கும் 46 உறுப்பினர்களில் 45 பேர் கட்சி மாறி இருக்கின்றனர்.
சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் சச்சரவுகளில் சிக்கி முன்னாள் முதல்வர் கலிகோ புல் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.