பெங்களூரு

ர்நாடக முதல்வராக குமாரசாமிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

பாஜகவுக்கு அதிகம் இடம் கிடைத்துள்ளதால் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் ம ஜ த வும் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகார பூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க இந்த ஆலோசனைக்கு காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ம ஜ த வின் குமாரசாமிக்கு முதல்வராக ஆதரவு அளிக்கும் எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

மேலும் இன்று மாலை இது குறித்து கர்நாடக ஆளுநரை காங்கிரஸ் கட்சி சந்திக்க உள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.