ரபேல் விமான பராமரிப்பு: மோடியின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடியில் ஒப்பந்தம்….ராகுல்காந்தி

டில்லி:

36 ரபேல் விமானங்களை பராமரிக்க மோடியின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடியில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிக்க மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பு ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக ரிலையன்ஸ் நிறுவன முதலீட்டு குறிப்பு ஒன்றையும் தனது பதிவில் ராகுல் காந்தி இணைத்துள்ளார். இதில் உண்மை உள்ளது. ஆனால், இதையும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுக்கக்கூடும்’’ என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.