அமேதியில் சகோதரி பிரியங்காவுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராகுலுக்கு பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு (வீடியோ)

லக்னோ:

உ.பி.யில் போட்டியிடும் ராகுல்காந்தி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தவற்காக அமேதி வந்துள்ளார்.. முன்னதாக தனது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் வதேராவுடன் வாகன பேரணியில் சென்றார். அவருக்கு அமேதி தொகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

எங்கு நோக்கினும் மக்கள் தலைகளாக காணப்படும் அமேதியில்,மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ராகுல்  ஆஇன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளனர். அவர்களுடன் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா மற்றும் குழந்தைகள் ரெய்ஹான் மற்றும் மிரயாவும் வந்துள்ளனர்.

ஏற்கனவே வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள ராகுல், போட்டியிடும் 2வது தொகுதியான அமேதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் மக்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.  கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியோடு வந்து  ஏப்ரல்  4 ஆம் தேதி மனுத்தாக்கல்  செய்தார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதையடுத்து அவரது ஆஸ்தான தொகுதியான அமேதியில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தார். அவருக்கு சாலைகள் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: amethi consituency, Priyanka Gandhi, Rahul, rahul gandhi, road show in Amethi, Robert Vadra
-=-