சத்திஸ்கரில் டாடா நிறுவனத்துக்காக கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்த ராகுல்

பஸ்தார்:

த்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை திருப்பி ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு, நிலத்திற்கான பத்திரங்களை அந்த பகுதியை சேர்ந்த விவசாய மக்களிடம் திருப்பி வழங்கிய, ராகுல்காந்தி, இங்கு டாடா தொழிற்சாலை வராது என்றும் தெரிவித்தார்..

கடந்த ஆண்டு நடைபெற்ற சத்திஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 65, பாஜக 15, அஜித் ஜோகி மற்றும் மாயாவதி கூட்டணி 9 இடங்கள் பெற்றுள்ளன.

அதைத்தொடர்ந்து மாநில முதல்வராக பூபேஷ் பகேல் பதவி ஏற்றார். இந்த நிலையில், ஏற்கனவே தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிப்படி, முந்தைய ஆட்சியாளர்களால், டாடா நிறுவனத்துக் காக பஸ்தார் பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விவசாய நிலங்கள் இன்று மீண்டும் அவர்களிடமே வழங்கப்பட்டது.

இன்று சத்திஸ்கர் மாநிலம் சென்ற ராகுல்காந்தி, பஸ்தரில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், லாங்கண்டி குடாவில் உள்ள டாடா தொழிற்சாலைக்கு கடந்த ஆட்சியின் போது, நிலப்பிரபுத்துவ நடவடிக்கைகள் மூலம் பறிக்கப்பட்ட நிலத்தினை கையப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை, அதற்கு உரிய  1707 விவசாயிகளுக்கும், திரும்ப ஒப்படைத்தார்.  மேலும் இந்த பகுதியில் டாடா தொழிற்சாலை வராது என்றும் உறுதி கூறினார்.

தங்களின் நிலம் தங்களுக்கு மீண்டும் கிடைத்தற்காக அந்த பகுதி மக்கள் ராகுல்காந்திக்கும், மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேல் மற்றும் அனைவருக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.