3ல் 1 பங்கு பெண்களுக்கு ஒதுக்குங்கள்: காங்கிரஸ் மற்றும் கூட்டணி மாநில அரசுகளுக்கு ராகுல்காந்தி கடிதம்

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், பெண்களுக்கு 3ல் 1 பங்கு இடம் ஒதுக்குங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி,  காங்கிரஸ் மற்றும் கூட்டணி மாநில கட்சிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடும் நோக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு காங்கிரசை வலுப்படுத்தி வருகிறார். அதுபோல பொதுமக்களை அவர் அணுகும் பாங்கு,  கூட்டணி கட்சிகளிடமும் மென்மையான அணுகுமுறை காரணமாக அமோக வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்த நிலையில்,  பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்  என்று வலியுறுத்தி, மாநில காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு  ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார்.  அதில் மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை  நிறைவேற்றுங்கள்  என அறிவுறுத்தியுள்ளார்.
Congress President Rahul Gandhi writes to Congress/Alliance Governments in States to pass a resolution in the next session to reserve one third of the seats in the Lok Sabha and Legislative Assemblies for women

கார்ட்டூன் கேலரி