காங்கிரஸ் கட்சியின் 134வது ஸ்தாபன தினம்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொடி ஏற்றி மரியாதை

காங்கிரஸ் கட்சியின் 134வது ஸ்தாபன தினம் இன்று.  இதையொட்டி டில்லியில் உள்ள  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பெருமைமிகு இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டு, நமக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த நாட்டின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 134வது ஸ்தாபன தினம் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

1885-ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, நாட்டின் விடுதலைக்காக இந்திய விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. நாடு முழுவதும் நடை பெற்ற சுதந்திர போராட்டங்களில் மக்களை ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்தது. இன்றுவரை நாடு முழுவதும் அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி  திகழ்கிறது.

காங்கிரஸ் தலைமையகத்தில் கொடி ஏற்றும் ராகுல்காந்தி

1885-ம் ஆண்டு உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் குமே (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedder burn,), தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு முதல் தலைராக உமேஸ் சந்திர பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்வு செய்யப்பட்ட தினம் டிசம்பர் 28, 1885ம் ஆண்டு. அன்றைய தினமே ஸ்தாபன காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது.

தொடக்கத்தில் 72 உறுப்பினர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, பிரிடிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியதன் காரணமாக உறுப்பினர் களின் சேர்க்கையும் அதிகரித்து வந்தது. 1907ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றித்தொடங்கியது.

அதைத்தொடர்ந்து,  பால கங்காதர திலகர், கோகலே போன்ற தலைவர்கள் தலைமையில் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக  சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டி வந்தது.  பாலகங்காதர திலகரின் முயற்சி காரணமாக  காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகி லட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக  போராட தூண்டியது.

காங்கிரஸ் கொடிக்கு மரியாதை செய்யும் ராகுல்காந்தி

அப்போது இந்திய விடுதலைப்போராட்டக்களத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் முக்கிய தலைவர்களாக பால கங்காதர திலகர், கோபால கிருஸ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் களமிறங்கியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து1915ம் ஆண்டு காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அதைத் தொடர்ந்து 1920ம் ஆண்டு காந்தி  இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் ஜகஹர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்கள் இணைந்த போராடி 1947ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் வாங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நாட்டின் முதல் பிரதமரா ஜவஹர்லால் நேரு தெர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பிறகு குல்ஷாரியா நந்தா, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என பல பிரதமர்கள் நாட்டை வழிந்திச் சென்றார்கள்.

லால் பகதூர் சாஸ்த்திரியின் திடீர் மறைவை ஒட்டி. அப்போதைய காங்கிரசு தலைவர் காமராஜ ரின் முயற்சி காரணமாக  இந்திராகாந்தி பிரதமர் ஆனார். 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பிடித்தது.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டாக உடைந்தது. ஆனால், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரஸ் என அறிவித்தது.

பின்னர்  1970ம் ஆண்டு இந்திராகாந்தி  ஆட்சியில் பசுமை புரட்சி நடைபெற்றது.  1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாககிஸ்தானுடன் நடைபெற்ற  போரில் வெற்றிபெற்று வங்காள தேசம் உருவாக்கப் பட்டது. பின்னர் 1974-ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தி உலக வரலாற்றில் இந்தியாவின் பெயரை நிலைநிறுத்தினார்.

இந்திராகாந்தியின் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர்களாக ராஜீவ் காந்தியும், பின்னர் சோனியா காந்தியும், தற்போது ராகுல்காந்தி தலைவராக இருந்து வருகிறது.

இளந்தலைவரான ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகளை  உலகமே வியந்து நோக்கி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று அரியணை ஏறும் என இந்தியர்கள் மட்டுமின்றி  உலக தலைவர்களும் பெரும் எதிர்பார்ப்ப்போடு காத்திருக்கின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 134th  Congress Foundation Day, 134வது ஸ்தாபன தினம், Congress Foundation Day, Congress President Rahul Gandhi, rahul gandhi, Rahul Gandhi hoists flag, காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைவர், கொடி ஏற்றி மரியாதை, ராகுல்காந்தி
-=-