நாடாளுமன்ற தேர்தல்: மார்ச் 13ந்தேதி தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி

டில்லி:

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் 13ந்தேதி தமிழகத்தில் தனது முதல் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல்.

பாராளுமன்ற தேர்தலில் தற்போது ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்தும் நோக்கில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்கின்றன.

இந்த நிலையில்.தமிழகத்தில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் வகையில், திமுக, காங்கிரஸ் உடன், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன. மேலும்,  வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, ஐ.ஜே.கே, தமிமும் அன்சாரி கட்சி போன்றவைகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. விரைவில் திமுக தலைமையிலான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 13ந்தேதி வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அவரின் முதல் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2019Elections, Congress President RahulGandhi, election campaign March-13, election campaigns, loksabha election2019, TN from March 13th., காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற தேர்தல் 2019, மார்ச் 13ந்தேதி ராகுல் பிரசாரம், ராகுல் தமிழகத்தில் பிரசைரம், ராகுல்காந்தி
-=-