டில்லி:

ன்றுபட்ட இந்தியா என்ற சக்தி வாய்ந்த செய்தியை மக்களுக்கு அனுப்புவோம் என்று மேற்கு வங்க முதல்வர்  மம்தாவுக்கு காங்கிரஸ் தலைவர்  ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பிரமாண்ட பேரணியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 19ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கொல்கத்தாவில்  நடைபெறும் பிரமாண்ட பேரணியில் எதிர்க்கட்சி தலை வர்கள் அனைவரும் கலந்துகொள்கின்ற னர். இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தலைமையில் மிகப்பெரிய மாநாடு  நாளை நடைபெறுகிறது. இதற்கு ஐக்கிய இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பாஜக எதிரான எதிர்க்கட்சிகள் அனைத்தும்  நாளை இந்த ஆலோசனையில் கலந்து கொள்கின் றன. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின். மஜத தேசிய தலைவர் தேவ கவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் எம்பி யஷ்வந்த் சின்கா, ஆர்எல்டி தலைவர் அஜித் சிங், தேசிய கான்பிரன்ஸ் தலைவர் பருக் அப்துல்லா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜகவை சேர்ந்த அதிர்ச்சி தலைவர் சத்ருகன் சின்கா, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஆர்ஜெடியின் தேஜேஷ்வி யாதவ், படிதார் ஜாதி இனத்தின் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் ஆகியோர் லந்து கொள்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த உறுப்பினரும், காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கேவும், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்கவியும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், மேற்கு முதல்வர் மம்தாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார். அதில்,

“இந்தியா முழுவதும் சக்திவாய்ந்த அமைப்புகள் எழுச்சி கண்டுள்ளன. மோடி அரசின் போலி வாக்குறுதிகளாலும் பொய்களாலும் வஞ்சிக்கப்பட்ட லட்சோப லட்ச இந்தியர்களின் கோபத்தாலும், ஏமாற்றத்தாலும் இந்த சக்திகள் எழுச்சி கண்டிருக்கின்றன.

இந்த சக்தி நாளை என்ற புதிய நம்பிக்கையால் உந்தப்பட்டுள்ளது. இந்த தேசத்தின் ஒவ்வொரு ஆணின் குரலும், பெண்ணின் குரலும், குழந்தையின் குரலும் செவி சாய்க்கப்பட்டு மதிக்கப்படும் நாளைய இந்தியாவின் நம்பிக்கையால் இந்த சக்தி உந்தப்பட்டிருக்கிறது.

மதம், பொருளாதாரம், அந்தஸ்து, பிராந்தியம் என்ற எந்தப் பிரிவினையும் இல்லாத நாளைய இந்தியா என்ற கருத்தால் இந்த சக்தி உந்தப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் திரளக் காரணம், உண்மையான தேசியவாதமும் வளர்ச்சியும் ஜனநாயகத்தின் சோதனைகளைத் தாங்கிய தூண்களால்தான் நிலைநிறுத்தப்படும் என்ற நம்பிக்கையே.

ஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகள் பாஜக மற்றும் மோடியால் சிதைக்கப்பட்டு வருகிறது.

தேசத்தின் கொள்கைகளை முன்னிறுத்துவதில் எப்போதுமே முன்னணியில் நிற்கும் வங்காள மக்களை வரலாறு கொண்டாடுவதைப் போல் நாமும் வாழ்த்துகிறோம்.

மம்தாவுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஒற்றுமையையும் நம்பிக்கையையும் பிரகடனப்படுத்தும் இந்த ஒன்றுகூடல் வாயிலாக ஒன்றுபட்ட இந்தியா என்ற சக்திவாய்ந்த செய்தியை அனுப்புவோம்” என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.