சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் சோனியா

--

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்.

சோனியா காந்தி, இந்த மாத தொடக்கத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றார். அவருக்கான சிகிச்சை குறித்தோ, அவர் எந்த நாட்டிற்கு சென்றார் என்றோ தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில், சோனியா காந்தியை இந்தியா அழைத்து வருவதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த 16ந் தேதி வெளிநாடு சென்றார். அவர் அமெரிக்க சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தியின் மருத்துவபரிசோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் இருவரும் விமானம் மூலம் டில்லி வந்தடைந்தனர்.