காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தசரா வாழ்த்து

டில்லி

ன்றைய தசரா பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி நிகழ்வுகள் விஜயதசமியான இன்றுடன் நிறைவு பெறுகிறது.  இதை தசரா பண்டிகை எனவும் அழைக்கின்றனர்.  தசரா பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், “ஒன்பது நாள் நவராத்திரி வழிபாட்டிற்கு பிறகு, வரும் தசரா அநீதிக்கு எதிராக  நீதியின் வெற்றியின் சின்னமாக, பொய்மைக்கு எதிராக மற்றும் ஆணவத்தை வெற்றிகொள்ளும் விவேகத்துடன், வந்துள்ளது   இது எத்தகைய சூழ்நிலையிலும் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு புதிய தீர்மானத்தை நமக்கு அளிக்கிறது

எந்த ஒரு ஆட்சியிலும் மக்களே முக்கியமானவர்கள், ஆட்சியாளர்கள் வாழ்க்கையில் ஆணவம் மற்றும் பொய்மையோடு நடப்பதற்கும் வாக்குறுதிகளை மீறுவதற்கும் இடமில்லை என்பதே விஜய தசமியின் மிகப்பெரிய செய்தி ஆகும்.

தசரா என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை மட்டும் இன்றி அவற்றிற்கும் மேலாக மக்களிடையே நல்லிணக்கத்தையும் கலாச்சார விழுமியங்களையும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வு என்று நான் நம்புகிறேன்.

இத்தகைய பண்டிகைகளின் போது கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அனைத்து கோவிட் 19 வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.