சாதி, மதம், மொழி பாகுபாடுகளை களைய புதிய ‘பாகுபாடு எதிர்ப்பு சட்டம்’: ராகுல்காந்தி உறுதி

--

டில்லி:

க்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையிலும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

பிரதமர் மோடியை போல பொய் விருப்பவில்லை என்று கூறிய ராகுல், மக்களின் எண்ணங்களே தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்திருப்பதாக கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில் பிஜேபி அரசு வெறுப்பு, பிரிவினை ஆகியவற்றை  வளர்த்து வந்துள்ளது என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி இந்தியாவை இணைப்பதற்காகவும், மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் காங்கிரஸ் செயல்படும் என்று தெரிவித்தார்.

இதற்காக புதிய சட்ட முன்வரைவு கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். ‘

நாடு முழுவதும் மக்களிடையே மதம், இனம், மொழி பாகுபாடின்றி வாழும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.

மத, பொது, சாதி, பாலினம் அல்லது மொழி அடிப்படையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வீடுகள், விடுதி வசதிகள் , சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கல் போன்றவற்றலும் எந்தவித பாகு பாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில்,  பாகுபாடுகளை தடுக்கும் வகையில், பாகுபாடு எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.