Random image

சாலையில் இருந்து நேரு சிலை அகற்றம்: உ.பி.யில் பரபரப்பு… காங். போராட்டம்

லக்னோ:

த்தரப்பிரதேசத்தில் சாலையின் நடுவே கைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலை மாநில அரசால் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு  காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி கடும் கண்டனம் தெரிவித்தது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் நகரில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அலகாபாத் நகரில் சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலையை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்து,  அங்கிருந்து அகற்றினர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். பாஜ முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பழிவாங்கும் செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு சிலையை அங்கிருந்து இருந்து அகற்றினர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி அதிகாரிகள், 2019ம் ஜனவரி மாதம் கும்பமேளா நடத்த முடிவாகி  உள்ளது.  அதன் ஒரு பகுதியாகசாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாகவே சிலை அகற்றப்பட்டது என்றும், நேரு சிலை விரைவில், அதே பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நேரு சிலை அமைக்கப்படும் என்றும் கூறி உள்ளனர்.

சிலை அகற்றப்பட்டதற்கு மாநில சமாஜ்வாதி கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.