ரபேல் விவகாரத்தில் ஒளிவு மறைவு ஏன் ? : காங்கிரஸ் சரமாரி கேள்வி

டில்லி

பேல் போர் விமான கொள்முதல் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் பாஜக அரசுக்கு சரமாரியாக கேள்விகள் தொடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக போர் விமானங்களை பாஜக அரசு கொள்முதல் செய்ய உள்ளது.  இதில் பல முறைகேடுகல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.   இது குறித்து விவரங்களை வெளியிட பாஜக அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சி பல கேள்விகளை எழுப்பி உள்ளது.    காங்கிரஸ் கட்சி, “ரபேல் ரக போர் விமானங்களின் தேவை அதிகமாக உள்ளதாக அரசு கூறி வரும் நிலையில் குறைவான எண்ணிக்கையில் விமானம் வாங்குவது ஏன்?  மொத்தம் 126 விமானங்கள் தேவை என்னும் போது 36 விமானங்களுக்கு மட்டும் எந்த விகிதத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது ?

முந்தைய அரசு ஒரு விமானத்துக்கு ரூ. 526 கோடி விலை பேசி இருந்த போது தற்போது ரூ. 1670 கோடிக்கு வாங்கப்படுவது எதற்காக ?  அரசு இந்த ரபேல் விமான பேரம் நியாயமாக நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் பாஜக ஏன் பாராளுமன்ற குழு விசாரணைக்கு ஏன் ஒப்புக் கொள்ளவில்லை?  இந்த விவகாரத்தில் ஒளிவு மறைவு ஏன்?”  என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.