குஜராத் தேர்தல்: இரண்டவது  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

அகமதாபாத்:

குஜராத் சட்டசபை தேர்தலில் தமது கட்சி சார்பாக  போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று இரவு வெளியிட்டது.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 9, 14 ஆகிய இருநாட்களில் நடக்க இருக்கிறது.   டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

குஜராத் மாநில ஆளுங்கட்சியான பா.ஜ.கவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதோடு, தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றன.

பாஜக இதுவரை மூன்று கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

இந்த நிலையில் அக்கட்சின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இதில்  13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: congress-released-2nd-list-candidates-gujarat-election-, குஜராத் தேர்தல்: இரண்டவது  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
-=-