மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், 13 வேட்பாளர்கள் பெயர்களை உள்ளடக்கிய முதல் கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரசும், இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 இடங்களில், 92 இடங்களில் களம் காண்கிறது. இந் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது

முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில், 4 முறை எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் மூத்த தலைவர் நேபால் மகோதா, பாகுமுண்டி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். மாநிலத் தலைவர் ரிபுன் போரா,கோபூர் தொகுதியில் களம் காண்கிறார். இதேபோல அசாமில் காங்கிரஸ் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.