டில்லி:

க்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே 5 கட்டமாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கேரளா மற்றும் மகாராஷ்டி மாநிலத்தில் போட்டியிடும் 9  வேட்பாளர்கள் அடங்கிய 6வது கட்ட பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி  வெளியிட்டுள்ளது. இவர்களில் 7 பேர் மகாராஷ்டிராவிலும், 2 பேர் கேரளாவிலும் போட்டியிடுகின்றனர்.

அதன்படி, ஆலப்புழா தொகுதியில் ஷானிமோல் உஸ்மான் போட்டியிடுகிறார்.  அட்டிங்கல் தொகுதியில்  அடூர் பிரகாஷ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஆலப்புழா தொகுதி  தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.கே.வேணுகோபால் வெற்றி பெற்ற தொகுதி. அவர் தேர்தலில் போட்டியிட விரும்பாததால், ஷானி மோல் உஸ்மானுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, மகாராஷ்டிராவில் 7 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

கே.சி.படாவி  –  நந்துர்பர் , குணால் ரோகிதாஸ் பட்டில் – துல,  சாருலதா கஜன்சிங் – தோகாஸ் வார்தா, மானிக்ராவ் ஜி. தாக்கரே – யாவட்மால் வாஷிம், ஏக்நாத் கெய்க்வாட் மும்பை தெற்கு தொகுதிக்கும், பஹாயுசாகிப் கம்ப்ளே – சீரடி, நவீன் சந்திர பன்டிவடேகர் – ரத்தினகிரி சிந்துதுர்கா

இந்த அறிவிப்புகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலின் பேரில் அறிவிக்கப்பட்டு உள்ளது.