மோடி ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சியே சிறந்தது: தமிழக மக்களின் கருத்து

சென்னை:

டந்த 4 ஆண்டுகளில் மத்திய பாரதியஜனதா அரசின் செயல்பாடுகள் மோசம் என்று தனியார் ஊடக கருத்துக்கணிப்பில் தெரிய வந்ததுள்ளது.

கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே, மோடி ஆட்சியை விட சிறப்பானதாக இருந்தாகவும் மக்கள் தெரிவித்து உள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றால், தமிழகத்தில்  காங். திமுக கூட்டணியே வெற்றி பெறும்  என்றும்,  தேசிய அளவில், காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக அளவு ஆதரவும், ராகுல்காந்தி பிரதமராக பெரும்பாலோனோர் ஆதரவு தெரிவித்துள்ளதும் தெரிந்தது.

இந்த நிலையில்,  எந்த அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது..? என்ற கேள்விக்கு 36 சதவிகிதம் பேர் காங்கிரஸ் கூட்டணி அரசே சிறந்தது என்றும், பாஜக கூட்டணிக்கு 27 சதவிகிதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளனர்.  அதேநேரத்தில் 37 சதவிகிதம் பேர் இரு அரசுகள் மீதும் அதிருப்தியில் இருப்பதும்  புதிய அரசியல் தலைமையை எதிர்பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.