புது டெல்லி:
காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், 100 சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை ஏற்று கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அந்தந்த மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பஞ்சாப் மாநிலம் 60 ரயில்களுக்கும், சட்டிஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முறையே 21 மற்றும் 22 ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் பயண செலவை ஏற்க உள்ளது. இந்த இரண்டு ரயில்களிலும் சுமாராக 1,400 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு பயணிக்க உள்ளனர்.
இதேபோன்று ராஜஸ்தான், சட்டிஸ்கர் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டு கொண்டதை அடுத்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் செலுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சாப் அரசும், 60 ரயில்களில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவுக்காக 6 கோடி ரூபாய் செலவிட உள்ளதகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க  35 கோடி ரூபாய் செலவில்,  16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் கூறினார்.
ராஜஸ்தான் அரசு, பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் 2.15 லட்சம் புலம்பெர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்து க்காக, 22 சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்திற்கு 7.5 கோடி ரூபாய் செலவிட உள்ளது.
இதுமட்டுமின்றி, மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க 12 கோடி ரூபாய் செலவிடப் பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டிஸ்கர் அரசும், 21 சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இரண்டு ரயில்கள் நீண்ட தூரம் பயணிக்கும், மற்றவை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளை செய்ய உள்ளது.
இதே போன்று, புதுச்சேரி அரசும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை,  ராஜஸ்தான் மற்றும் கேரளாவுக்கும், ரயில் மூலம் பீஹார் மற்றும் மேற்கு வங்கத்திற்கும் அனுப்ப 40 லட்சம் ரூபாய் செலவிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.