டில்லி:

ர்எஸ்எஸ் தலைவர் வீர் சவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்படும் என்று பாரத ரத்னா தெரிவித்துள்ள நிலையில், அதற்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வீர சவர்க்கர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 21ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை யில், ஆர்எஸ்எஸ் தலைவர் வீர் சவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறைஅமைச்சர் அமித்ஷாவும், ஆங்கிலேயருக்கு எதிராக முதல் போராட்டம் தொடங்கியது சவர்க்கர்தான் என்றும் கூறியிருந்தார்.

பாஜக தலைவர்களின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்ப தெரிவித்து உள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, காந்திஜி கொலை வழக்கில் தொடர்புடைய வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். பாஜகவினர் இனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள்  என்றும்,  இந்த நாட்டில் என்ன நடக்கிறதென்றே எனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டார்.

வீர் சவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்த பாஜகவுக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வீர் சவர்கர் ஒன்றும் சுதந்திர போராட்டத் தியாகி அல்ல என்றும், சாவர்க்கர் சுதந்திரத்திற்காக போராடவில்லை என்று கூறும், சவர்கர் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மகாத்மா காந்திஜியை சுட்டுக்கொன்றவர் என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாததற்கு காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியே காரணம் என்று பிரதமர் மோடி நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்நிலையில், மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்பு படுத்தப்பட்ட வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்குப் பதில், காந்தியை கொன்ற நாதூராம் கோட்சேவுக்கே பாரத ரத்னா வழங்கலாம் என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

காந்தியின் 150ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடும் இந்த தருணத்தில் அரசு அவ்வாறு அறிவிக்குமானால், அது பொருத்தமாக இருக்கும் என்றும் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் மற்றும் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற இரு முகங்கள் வீர சாவர்க்கருக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை ஏற்க மறுக்கும் பாரதிய ஜனதா கட்சி, சவர்க்கர் குறித்து காங்கிரஸ் தவறான தகவல் தெரிவித்து வருவதாகவும், இதற்காக காங்கிரஸ் கட்சி மனிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.