டில்லி

பிரதமர் மோடிக்குச் சிறந்த  நடிகருக்கான ஆஸ்கார் விருதும் சிறந்த் வில்லனுக்கான விருது அமித் ஷாவுக்கும் வழங்க உள்ளதாகக் காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

லாஸ் ஏஞ்ச்லஸ் நகரில் இன்று உலகப் புகழ் பெற்ற திரைப்பட விருதுகளான ஆஸ்கார் விருதுகளுக்கான அறிவிப்புக்கள் வெளியாகின. சிறந்த நடிகர் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயி பீனிக்ஸ் பெற்றுள்ளார்.  ஜூடி படத்தில் நடித்த ரெனே ஸெல்விகர் சிறத நடிகைக்கான விஉதை பெற்றுள்ளார். அதைத் தவிர  தென் கொரியப் படமான பாரசைட் மொத்தம் 4 விருதுகளைப் பெற்றுள்ளது.

இது போல் காங்கிரஸ் கட்சியும் ஆஸ்கார் விருதுகளை அறிவித்துள்ளது.   அந்த விருதுகளில் நகைச்சுவைக்கான விருதுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை பரிந்துரை செய்து மனோஜ் திவாரிக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ள்து.

சிறந்த வில்லன் நடிகருக்கான விருதுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு   அமித்ஷாவுக்குச் சிறந்த வில்லன் விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது

சிறந்த நடிகருக்கான விருதுக்கு பாஜக பெண் மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாக்குர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை  பரிந்துரை செய்து பிரதமர் மோடிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்த வீடியோக்கள் வலை தளங்களில் வைரலாகி வருகிறது.  பாஜவினர் மத்தியில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோக்கள் கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.