கருணாநிதியை சந்திக்க குலாம் நபி ஆசாத் வருகை

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று முதல் அவரது உடல் நிலை நலிவடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதால் அவருக்கு மருத்துவ குழுவினர் வீட்டிலேயே சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கருணாநிதியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் இன்று இரவு சென்னை வருகிறார். அவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்கவுள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.