மோடிக்கு காங்கிரஸ் சிபாரிசு செய்த 3 புத்தகங்கள் எவை தெரியுமா?

டில்லி

ன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸை சரமாரியாக தாக்கிய மோடிக்கு 3 புத்தகங்களை படிக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.

பிரதமர் மோடி இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தேர்தல் லாபத்துக்காக நாட்டை துண்டாட நினைப்பதாகவும் பல மாநிலங்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒன்றும் செய்யவில்லை எனவும் தாக்கினார்.    அதற்கு ராகுல் காந்தி மோடி தான் ஒரு பிரதமர் என்பதையே மறந்து விட்டு பேசுவதாகவும்,   ரஃபேல் விமான விவகாரம் உட்பட பல முக்கிய அம்சங்கள் குறித்து எதுவும் பேசவில்லை என குற்றம் சாட்டினார்.

இது குறித்து முன்னாள் சட்ட அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி, “காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்தது என்பது சரித்திரத்தில் உள்ளது.   ஆனால் மோடியிடம் உள்ளது மோசமான சரித்திரம்.    அவருக்கு உண்மையான சரித்திர நிகழ்வுகள் தெரிய வேண்டும் என்றால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா,  மற்றும் வரலாற்றுக் காட்சிக் கூறுகள், காந்தி எழுதிய சத்திய சோதனை ஆகியவைகளை படித்து தெரிந்துக் கொள்ளட்டும்.” எனக் கூறி உள்ளார்