பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

சண்டிகர்:
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 22 ஜில்லா பரிஷத்களில் மொத்தமுள்ள 353 மண்டலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 331 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் 18 இடங்களிலும், பாஜக மற்றும் பிற கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

150 பஞ்சாயத்து சமிதிகளில் மொத்தமுள்ள 2,899 மண்டலங்களில் நடைபெற்ற தேர்தலில் 2,351 இடங்களில் காங்கிரசும், சிரோன்மனி அகாலி தளம் 353 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி குறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகையில், ‘‘எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இந்த வெற்றி சென்றடையும். விவசாயிகள் கடன் தள்ளுபடி, போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கை என அனைத்து விஷயங்களிலும் மக்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர் என்பதேயே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன’’என்றார்.