நெடுவாசல் போராட்டத்துக்கு திருநாவுக்கரசர் நேரில் ஆதரவு

புதுக்கோட்டை:

நெடுவாசலில் நடக்கும் மக்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள் சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் போல் இந்த போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நெடுவாசல் வந்தார். அங்கு போராட்டம் நடத்தும் மக்கள் மத்தியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர்.