கஜா புயல் : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி

டில்லி

மீபத்தில் அடித்த கஜா புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு காங்கிரஸ்கட்சி தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் தமிழக்த்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடு மற்றும் கால்நடைகளை இழந்துள்ளனர். பலர் மரணம் அடைந்துள்ளனர். நிவாரணப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு தரப்பில் இருந்து போதுமான நிதி உதவி வரவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.  இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.