னாஜி

திர்க்கட்சிகளை சந்திப்பதை தவிர்த்து வரும் கோவா முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவருக்கு கோவா, மும்பை டில்லி மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் தனது இல்லத்தில் ஓய்வில் இருந்தார். மாநில நிர்வாகம் இதனால் தேக்கமடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. அதன் பிறகு மாநில அரசின் கட்டுமானப் பணிகளை அவர் பார்வை இட்டார்.

மனோகர் பாரிக்கர் அவர் இல்லத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்தித்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை அவர் சந்திப்பது இல்லை. மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் அவரை சந்திக்க விரும்பியும் அவருக்கு முதல்வர் நேரம் ஒதுக்கவில்லை.

இந்நிலையில் கோவா மாநிலத்தின் வரும் கணக்கு வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை குறித்து சட்டப்பேரவை குழு கூட்டம் நடைபெற வேண்டி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த கூட்டம் நடந்து நிதிநிலை அறிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் உள்ள ஆறு பேரில் முதல்வர் மனோகர் பாரிக்கர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரும் உள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் கிரிஷ் கோடங்கர், “முதல்வர் ஆளும் கட்சியினரை மட்டுமே சந்தித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசாரை அவர் சந்திப்பதை ஏனோ தவிர்த்து வருகிறார். இதைப் போல அவர் நிதிநிலை அறிக்கை குறித்த சந்திப்பிலும் கலந்துக் கொள்வது சந்தேகமாக உள்ளது. அவர் அவ்வாறு கலந்துக் கொள்ளவில்லை எனில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தும்” என தெரிவித்துள்ளார்.