மணிப்பூரில் அரசு அமைக்க ஆளுநரை காங்கிரஸ் சந்திக்கிறது.

ம்பால்

ணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநரை காங்கிரஸ் சந்திக்க உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது.   அந்த தேர்தலில் பாஜக 21 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.   இதர கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பெரும்பான்மையைக் காட்டியதால் பாஜக ஆட்சி அமைத்து தற்போது ஆட்சியில் உள்ளது.

தற்போது கர்நாடக ஆளுநர் அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சி என்பதால் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்.   அதை ஏற்று எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.  மணிப்பூர் மாநில எதிர்க்கட்சித் தலைவரான இபோபி சிங் இன்று பத்திரிகையாளர்களிடம், “கடந்த 2017ஆம் வருட தேர்தலில் நாங்கள் தான் அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சியாக இருந்தோம்.   அதனால் எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து வற்புறுத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.