தீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மான நிராகரிப்பை எதிர்த்து வழக்கு…காங்கிரஸ்

டில்லி:

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தது. இதை வெங்கையா நாயுடு நிராகரித்து விட்டார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ‘‘தீர்மானத்தை நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவதற்கான தீர்மானத்தை துணை குடியரசுத்தலைவர் நிராகரித்தது சட்டவிரோதம்.

தீர்மானம் முறையாக இருக்கிறதா? இல்லையா என்பதை மட்டுமே ஆராய வேண்டும். தீர்மானத்தை அவசர கதியில் வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார். எனவே இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’’ என்றார்.