ஆளுநர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை

ன்று நாடெங்கும் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாடம் நடத்த உள்ளது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சி கலைப்பு நடந்து பாஜக ஆட்சியைப்  பிடித்து வருகிறது.

இந்நிலை கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ராஜஸ்தான் வரை நீண்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க மத்திய பாஜக அரசு முயன்று வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இதையடுத்து இன்று நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.