திருவாரூர் தொகுதி இடை தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு

சென்னை

டைபெற உள்ள திருவாரூர் சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி மரணமடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.   அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், “திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக கழகத்தின் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

நன்றி : டிவிட்டர்

You may have missed