டில்லி:

‘‘எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகை சீட்டு வழங்கு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், அரசியல் பிரிவு செயலாளர் அகமது படேல் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, தேர்தல் ஆணையர்கள் ரவாத், சுனில் அரோரா ஆகியோரை நேரில் சந்தித்தனர்.

அப்போது அவர்கள், ‘‘ எதிர்காலத்தில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எ ந்திரத்தை (இவிஎம்) பயன்படுத்தக் கூடாது. வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்றும் வகையிலான ஒப்புகை சீட்டு வழங்கும் ‘விவிபிஏடி’ எந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதோடு உ.பி. மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக ஒரு கோரி க்கை மனு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த மனுவில், ‘‘குஜராத் தேர்தலில் விவிபிஏடி எந்திரம் மூலம் நேர்மையான தேர்தல் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். அரசியலமைப்பின் முக்கிய அம்சமான தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

நேர்மையான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் ஒப்புகை சீட்டு அளிக்கும் எந்திரத்தை பயன்படுத்தும் வகையில் ஒரு வாக்குப்பதிவுக்கு 7 விநாடிகளில் இருந்து 13 விநாடிகளாக உயர்த்த வேண்டும்.

சிறைக் கைதிகள், சமூக விரோதிகள், ரவுடிகள் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவது அல்லது விசாரணைக்கு அழைத்து செல்வது, பரோலில் விடுவது போன்ற செயல்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த மனுவில், ‘‘வாக்காளர்களின் உரிமை குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது. அதில் வாக்குப்பதிவு சமயத்தில் முறைகேடு நடந்தால் அதை தட்டிக் கேட்டும் உரிமை உள்ளது என்பதையும் விளம்பரத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை அல்லது தேர்தல் முடிவில் வேட்பாளர் திருப்தி அடையாமல் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளரு க்கு சான்றிதழ் வழங்கும் போது காகிதத்தில் வாக்கு விகிதாச்சாரத்தை குறிப்பிட்டு வழங்க வேண்டும். இதன் மூலம் விவிபிஏடி.யின் உண்மை தன்மையை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்’’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மதுசூதம் மிஸ்திரி, தபக் பாபாரியா, விவேக் தங்கா, ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, அர்ஜூன்பாய் மொத்வாதியா, சித்தார்த் படேல், ராபாரி, கவுரவ் பாண்டியா ஆகியோரும் உடன் சென்றனர்.