கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை

பெங்களூர்:

டைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி  எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாரதியஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, எதவி பிரமாணம் செய்து வைத்த கவர்னர் மற்றும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள், கர்நாடக சட்டமன்றம் அமைந்துள்ள விதான்சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பதவியேற்புக்கு எதிராகவும்,  இன்று காலை பதவி ஏற்றுள்ள  பி.எஸ். எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று  காங்கிரஸ் மூத்த தலைவர்கள், குலாம் நபி ஆசாத்,  அசோக் கெலாட், மல்லிகார்ஜூன் கார்கே, கே.சி. வேணுகோபால், சித்தராமையா ஆகியோர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் விதான சந்துவில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஒன்றுகூடி தரையில் அமர்ந்து தர்ணா செய்து வருகின்றனர்.

காந்தி சிலை முன்பு அமர்ந்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மற்றொருபுறம் எடியூரப்பா பதவி ஏற்றதை பாஜகவினர் ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் சிறப்பித்து வருகின்றனர்.

காந்தி சிலை முன்பு அமர்ந்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக விவகாரம் உச்ச நீதிமன்றத்தித்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், இங்கே பதவி ஏற்பு நடைபெற்றுள்ளது என்று கூறினார்.

இந்த ஜனநாயக விரோத செயல் குறித்து, நாங்கள் மக்களிடம் செல்வோம். அரசியலமைப்பிற்கு எதிராக பாஜக எப்படி நடந்து கொள்கிறது என்பதை நாம் அவர்களுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார்.