Random image

காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவு: ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்

டெல்லி: உண்மையான காங்கிரஸ்காரர் மோதிலால் வோராவை இழந்து விட்டோம் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் தொற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிறுநீரக கோளாறு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஒக்லா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் சிகிச்சை பலனளின்றி வோரா காலமானார். அவருக்கு வயது 93. மறைந்த அவரின் இறுதிச்சடங்குகள் சொந்த மாநிலமான சத்தீஸ்கரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மறைவிற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராகுல் காந்தி தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: வோரா அவர்கள் ஒரு உண்மையான காங்கிரஸ்காரர் ஆவர். ஒரு அற்புதமான மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அன்பும் இரங்கலும் தெரிவித்து கொள்வதாக கூறி உள்ளார்.