கொரோனா தொற்று: மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மோதிலால் வோரா காலமானார்!

போபால்: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா காலமானார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் இதுவரை 2,31,284 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இதுவரை 2,16,485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 11,318 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,481 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், மாநில  காங்கிரஸ் மூத்த தலைவரும்,  மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா (வயது 93) தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில்  சிகிச்சை பலனின்றி  இன்று மதியம் டெல்லியில் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோதிலால் வோரா  நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இன்று உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed