திருவனந்தபுரம்

த்மாவதி இந்தித் திரப்படத்தை கேரளாவில் வெளியிடுவதை உறுதி செய்யுமாறு கேரள முதல்வரை காங்கிரசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பத்மாவதி திரைப்படம் கடும் சர்ச்சைக்குள்ளாகி வருவது தெரிந்ததே.   படத்தில் சித்தூர் ராணி பத்மினியைப் பற்றி தவறாக சித்தரித்தாகக் கூறி இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன.  ஒரு சில மாநிலங்களில் படம் வெளியிட அனுமதிக்க முடியாது என அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.  தீபிகா மற்றும் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப் பட்டுள்ளன.  இந்தப் பட வெளியீட்டை எதிர்த்து ஒருவர் ராஜஸ்தானில் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி வெளியானது

கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் ஹாசன், “பத்மாவதி திரைப்படத்துக்கு கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.  இந்த எதிர்ப்பானது கருத்துச் சுதந்திரத்துக்கு விடும் எச்சரிக்கை என எடுத்துக் கொள்ளலாம்.  இது குறித்து கேரள முதல்வர் இதுவரை எதுவும் கூறாதது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  அவர் இத்திரைப்படம் கேரளாவில் வெளியிடுவதை உடனடியாக உறுதி செய்யவேண்டும்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இது போல் உறுதி செய்துள்ளார்.  அதைப் பின்பற்றி கேரளா முதல்வர் பினராயி விஜயனும் இந்த திரைப்படம் கேரளாவில் வெளியிடப்படும் என அறிவிக்கலாம்.  படத்துக்கு எதிர்ப்பு இருக்கும் என அவர் நினைத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளார்.