பி சி பாடிலுக்கு  காங்கிரஸ் கொறடா எச்சரிக்கை

--

பெங்களூரு

காங்கிரஸ் எம் எல் ஏ வான பி சி பாடில் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் கொறடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாடிலுடன் சித்தராமையா, மற்றும் பாஜகவின் தலைவர்கள் பேரம் பேசிய விவகாரம் வெளிவந்துள்ளது.  ஆடியோவாகவும் டிவிட்டர் பதிவாகவும் இவை பரவி வருகிறது.

இந்நிலையில்  காங்கிரஸ் உறுப்பினர்களில் கட்சி மாறி வாக்களிப்பார்கள் என கருதப்பட்ட பாடில், ஆனந்த் உள்ளிட்டோர் நம்பிக்கை தீர்மானத்தில் வாக்களிக்க சட்டசபை வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் வாகனத்தில் இருந்து இறங்கிய உடனேயே கட்சிக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது எனவும் அவ்வாறு வாக்களித்தால் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தொடர தகுதியற்றவர்கள் ஆகி விடுவார்கள் எனவும் காங்கிரஸ் கொறடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.