புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்கிரசே ஏற்கும்! மோடிக்கு அதிர்ச்சி கொடுத்த சோனியா…

--

டெல்லி:

புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்கிரசே ஏற்கும் அதிரடியாக அறிவித்து மோடிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி.

கொரோனாவை  தடுக்க  மேலும் 2 வாரம் ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பலாம் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. ஆனால், அவர்கள் ரயில் பயணக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. லாக்டவுனால் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிப்பதாக என கேள்வி எழுப்பப்பட்டது.

ஒரு பெட்டிக்கு 54 பயணிகள் என்ற அளவில் தனிநபர் இடைவெளியுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த ரயில்களில் கட்டணங்களும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் கட்டணம் வசூலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை.

வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க கோடிக்கணக்கில் செலவழித்து விமானத்தை இலவசமாக இயக்கிய அரசு, சாதாரண கூலித்தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது மோசமான செயல் என கடும்கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில்,  நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அதிரடியாக அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 17-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாநிலங்களில் அவதிப்படும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,   வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான விமான கட்டணத்தை மத்திய அரசு பொறுப்புடன் ஏற்றுக் கொள்கிறது. அப்படியான சூழ்நிலையில் ரயிலில் சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களுக்கான கட்டணம், உணவு செலவுக்கு மத்திய அரசு ரூ100 கோடி ஒதுக்கீடு செய்யலாம்.

4 மணிநேர அறிவிப்பு கொடுத்து லாக்டவுனை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆகையால் பிற மாநிலங்களில் பரிதவித்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள் பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல தொடங்கினர்.

1947-ம் ஆண்டு நாட்டு பிரிவினைக்குப் பின்னர் நிகழ்ந்த முதலாவது மிகப் பெரிய மனித பேரவலம் இது. ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பல நூறு கி.மீ தூரத்தில் கால்நடையாக நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், இவ்வளவு பெரிய மனித செலவில் இந்தியா ஒரு சோகத்தை கண்டது இதுவே முதல் முறையாகும்-

உணவு இல்லாமல், மருந்துகள் இல்லாமல், பணம் இல்லாமல், இல்லாமல் போக்குவரத்து, அவர்களது குடும்பங்களுக்கும் அன்பானவர்களுக்கும் திரும்புவதற்கான விருப்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

“அவர்களின் அவலநிலை பற்றிய சிந்தனை நம் இதயங்களை உடைக்க போதுமானது, ஏனென்றால் சக இந்தியர்களிடமிருந்து அவர்களின் எழுச்சியூட்டும் தீர்மானத்திற்கு ஆதரவும் வெளிப்பட்டது.”

ஊரடங்கு  தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் இந்த பிரச்சினையை எழுப்பி வருவதாகவும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு பாதுகாப்பான மற்றும் இலவச ரயில் பயணத்திற்கான ஏற்பாடுகளை கோரி வருவதாகவும், ஆனால்,  எங்கள் தொடர்ச்சி யான கோரிக்கைகள் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற் கான செலவை அதன் அனைத்து மாநில பிரிவுகளும் ஏற்கும் என்றும். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்துள்ளது .

“எங்கள் தோழர்களின் சேவையில் காங்கிரஸின் தாழ்மையான பங்களிப்பு இது என்றும், அவர்களுடன் ஒற்றுமையுடன் தோளோடு தோள் நிற்கும்” என்றும் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

சோனியாவின் கடிதத்தைத் தொடர்ந்து,  காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல் அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  . “காங்கிரஸ் தலைவரின் உத்தரவுப்படி, கருவூல (ஏ.ஐ.சி.சி) என்ற எனது திறனில், புலம்பெயர்ந்தோர் வீடு திரும்புவதற்கு டிக்கெட் வாங்குவதற்கு உதவக்கூடிய அனைத்து உள்ளூர் வளங்களையும் திரட்டுமாறு நான் பிரதேச காங்கிரஸ் குழுக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று  தெரிவித்து உள்ளார்.

மேலும்,  இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டிய நேரம் இது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தியின் அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.