Random image

2019ல் காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெற்றி பெறும்…வீரப்ப மொய்லி

டில்லி:

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ நாடாளுமன்ற தேர்தலில் பிராந்தியம் வாரியாக காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதிகள் அதிகரிக்கும். காங்கிரஸ் 150 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும். நேர்த்தியான வேட்பாளர்கள் தேர்வு மற்றும் கூட்டணியின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.’

ரபேல் போர் விமான விவகாரத்தை காங்கிரஸ் மட்டுமே முக்கியமாக வலியுறுத்துகிறது. இந்த விவகாரத்தில் இதர ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் இருக்கும். இவ்விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம், மற்ற கட்சிகளும் இப்பிரச்சனையை எழுப்பின. ஆனால் தொடரவில்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஊழல்’’என்றார்.