ந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்று தனியார் நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது.

அதில், கர்நாடகாவில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதாகவும், கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளை விட அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்ற சூழலில் கடந்த சில மாதங்களாகவே காங்கிரசும், பாஜகவுக்கும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே மோடி கர்நாடகாவில் வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் 3 கட்ட தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில், கர்நாடகாவில்,  ஆட்சியை வைத்துக்கொள்ள தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்  தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதே வேளையில், பாரதியஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ்  மீண்டும் ஆட்சி வர வாய்ப்புள்ளது என்றும், கடந்த 2013ம் ஆண்டை விட தற்போது காங்கிரன்  பலம் அதிகரித்துள்ளது என்று  தனியார் நிறுவனமாக சி-ஃபோர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிங்காயத் மடாதிபதிகள் முதல்வர் சித்தராமையாவை சநதித்து மனு கொடுத்தபோது

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக  சட்ட மன்றத்தில், வர உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 154 சட்டசபை தொகுதிகளில், 22,357  வாக்காளர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடைபெற்ற தாகவும், இதற்காக 2368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதாகவும், இதில் 326 வாக்குச்சாவடிகள் நகரப் பகுதிகளி லும், 977 வாக்குச்சாவடிகள் கிராமப்பகுதிகளிலும் அமைக்கப்பட்டு க்ருத்து கணிப்பு நடைபெற்றதாக கூறியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு சி ஃபோர் போர் நடத்திய  கருத்துகணிப்பின்படி, 119-120 இடங்களில் காங்கிரசுக்கு கிடைக்கும் என கூறிய நிலையில் 122 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

தற்போதைய கருத்துக்கணிப்பின்படி, காங்கிரசுக்கு 9 சதவிகித வாக்கு அதிகரித்திருப்பதாகவும், இதன் காரணமாக காங்கிரசுக்கு 46 சதவிகித வாக்குகள் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது.

மேலும் பாரதியஜனதாவுக்கு 31சதவிகித வாக்குகளும், ஜனதாதள் (எஸ்)க்கு 16 சதவிகித வாக்குகளும் இருப்பதாக கூறி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு 122 இடங்களை பிடித்த காங்கிரஸ்,  வர உள்ள சட்டமன்ற தேர்தலில் 126 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும், கடந்த 2013ம் ஆண்டு வெறும் 40 இடங்களை மட்டுமே பிடித்த பா.ஜ.க வர உள்ள தேர்தலில் 70 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறி உள்ளது. அதே நேரத்தில் ஜனதாதள் (எஸ்) ஏற்கனவே பெற்ற 40 இடங்களில் இருந்து குறைந்து 27 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறி உள்ளது.

மேலும், சர்வேயில், 44 சதவிகிதம் ஆண்கள் காங்கிரசுக்கு ஆதரவாகவும், 33 சதவிகிதத்தினர் பாரதிய ஜனதாவுக்கும், ஜனதா தளத்துக்க 17 சதவிகிதம் பேரும், மற்றவர்கள் 6 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்களிடத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில்  காங்கிரசுக்கு  29 சதவிகிதம் பேரும், பாஜகவுக்கு 14 சதவிகிதத்தினரும், ஜனதாதள் (எஸ்)க்கு 8 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அதுபோல, மாநில மக்களிடத்தில் வயது வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரத்தையும் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, 18முதல் 25 வயதினர்களில் 46 சதவிகிதம் பேரும், 26 முதல் 35 சதவிகிதத்தினரில், 47 சதவிகிதம் பேரும், 36முதல் 50 வயதினர்கள் மத்தியில் 43 சதவிகிதம் பேரும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேரும் காங்கிரசுசக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் நிலவும் முக்கிய பிரச்சினைகள்

கர்நாடகாவில் குடிநீர் பிரச்சினை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மாநிலத்தின் நம்பர்1 பிரச்சினையாக சுத்தமான  குடிநீர் பிரச்சினை இருப்பதாக  32சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், 26 சதவிகிதம் பேர் குடிநீர் பிரச்சினையை  2வது பிரச்சனையாகவும், 9 சதவிகிதம் பேர் குடிநீர் பிரச்சினை 3வது பிரச்சினை என்றும் கூறி உள்ளனர்.

அதே நேரத்தில்,  மாநிலத்தில் நிலவும் டிரெயினேஜ், வடிகால் அமைப்பு மற்றும் சாலை பிரச்சினை பூதாகரமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர்களில்  சித்தராமையா – நம்பர்-1

கர்நாடக மாநில முதல்வர்களில் சித்தராமையாவே டாப் என்று அம்மாநில மக்கள் கூறி உள்ளனர். இவர்களில் 45 சதவிகிதம் பேர் சித்தராமையாவே சூப்பர் முதல்வர் என்று தெரிவித்துள்ளனர்.

26 சதவிகிதம் பேர் பாஜக முன்னாள் முதல்வரான எடியூரப்பாவையும், 13 சதவிகிதம் பேர் குமாரசாமியையும் சிறந்த முதல்வர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ் தற்போது லிங்காயத், தனி மதமாக அங்கீகரித்து உள்ளதற்கு 61 சதவிகிதம் பேர் ஆதரவும், 32 சதவிகிதம் பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 7 சதவிகிதம் பேர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவும் மறுத்து உள்ளனர்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களில் 65 சதவீதம் மக்களில், காங்கிரஸ் ஏழைகளின் நலனுக்காக வேலை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

64% விவசாயிகள் காங்கிரஸ் அரசே  விவசாயிகளுக்கு மிக அதிகமான நன்மைகளை செய்துள்ளனர் என்றும், 18% பேர்  பா.ஜ.க.வையும்,  15% ஜே.டி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதுபோல 74 சதவிகித தலித் ஓட்டுக்களில் 57சதவிகித பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  67 சதவிகித தாழ்த்தப்பட்ட  மற்றும் பழங்குடியினர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 12ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி காரண மாக பாரதியஜனதாவுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரெயில்வே ஸ்டேஷனில் இந்தி திணிப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 92 சதவிகி தம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுபோல கர்நாடக அரசு தற்போது அறிமுகப்படுத்தி உள்ள கர்நாடகாவுக்கு தனிக்கொடி விவகாரத்துக்கு 56 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்

மாநில விவகாரங்களில் மத்திய பாஜக அரசு சிபிஐ வைத்து மிரட்டி வருவதை 58 சதவிகிதம் பேர் கண்டித்தும் வாக்களித்துள்ளனர்.

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு  அமல்படுத்திய பண மதிப்பிழப்புக்கு 42 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தும, 48 சதவிகிதம் பேர் ஆதரவும் தெரிவித்து உள்ளனர்.  நாட்டின் ஏழை மக்களை மத்திய அரசு கண்டு கொள்ள வில்லை என்றும்  குற்றம் சாட்டி உள்ளனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு 64 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பகுதி வாரியாக வெற்றி பெறும் விவரம்…

பெங்களூரு சுற்றுவட்டார  பகுதிகள் அடங்கிய  28 சட்டமன்ற தொகுதிகளில், 19 தொகுதிகள் காங்கிரசுக்கு கிடைக்கும்