கர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

பெங்களூரு:

ர்நாடகாவில் கடந்த 11ந்தேதி நடைபெற்ற ஜெயநகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணாக கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 ஆக கூடி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த மாதம் 12ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் நேரத்தில், ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து, அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

ஜெயநகர்  தொகுதிக்கு கடந்த 11ந்தேதி இடைத்தேர்தல்  நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக  சவுமியாரெட்டி  போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ஏற்கனவே போட்டியிட்ட பாஜக வேட்பாளர்  விஜயகுமாரின் தம்பி பிஎன் பிரகலாத் நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கம் முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தத நிலையில், தற்போது காங்கிரசின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 சுற்றுக்கள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி, பாஜ வேட்பாளரை விட 2,899 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்நகர் தொகுதியில்  காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Congress wins Jayanagar assembly seat in Karnataka, கர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் மஜக வேட்பாளர் வாபஸ்...காங்கிரஸூக்கு ஆதரவு
-=-