பா ஜ க ஆளும் மத்தியப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

போபால்

த்திய பிரதேச மாநில சித்ரகூட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி அடைந்துள்ளது.

பா ஜ க ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் உள்ள சித்ரகூட் சட்டசபை தொகுதியில் உறுப்பினராக இருந்த பிரேம் சிங் மரணம் அடைந்தார்.   இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.  இவர் மறைவினால் காலியான சித்ரகூட் தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை அன்று இடைதேர்தல் நடைபெற்றது.   இந்த தேர்தலில் 65% வாக்குஅல் பதிவாகி உள்ளது.    மொத்தம் 12 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷ் சதுர்வேதி மற்றும் பா ஜ க வேட்பாளர் சங்கர்லால் திரிபாதி ஆகியோர் முக்கிய போட்டியாளர்கள் ஆவார்கள்.

இன்று காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கை சட்னா மாவட்டத்தில் துவங்கியது.   ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் இருந்தார்.  எண்ணிக்கை முடிவில் பா ஜ க வேட்பாளரை காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷ் சதுர்வேதி  14100 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்துள்ளார்.   இந்த வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.