ராஜஸ்தான் மாநிலத்தில் நகரசபை தேர்தலில்  காங்கிரஸ் அமோக வெற்றி…

ராஜஸ்தான் மாநிலத்தில் நகரசபை தேர்தலில்  காங்கிரஸ் அமோக வெற்றி…

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 50 நகரசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 50 நகரசபைகளில் காங்கிரஸ் கட்சி 36 நகரசபைகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

பா.ஜ.க. 12 நகரசபைகளில் மட்டுமே வென்றுள்ளது.

சுயேச்சைகள் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

தலைநகர் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள 10 நகரசபைகளில் 9 நகரசபைகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஒரு நகரசபை சுயேச்சை வசம் சென்றுள்ளது.

அண்மையில் நடந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி, அந்த கட்சிக்கு

புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.