பெங்களூரு

ர்நாடகா மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.  எனவே நடந்து முடிந்த 184 இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் பாஜக எளிதாக வெற்றி பெறும் என நம்பப்பட்டது.    பாஜகவினர் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதாகவே கூறி வந்தனர்.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.  இந்த தேர்தலில் மிகவும் அதிக இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.  இரண்டாவதாக மதச்சார்பற்ற ஜனதா தளமும் மூன்றாவது இடத்தில் தான் பாஜகவும் உள்ளன.   இது பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் முடிவுகள்

காங்கிரஸ்              108

ம ஜ த                        36

பாஜக                       33

சுயேச்சைகள்          7

ஐமிம்                           2

தேசிய மாற்று         1