டில்லி

க்களவை தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு எதிராக முடிவுகள் வந்துள்ளதால் தொண்டர்கள் தவறாக நடந்துக் கொள்ள வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. இதில் பல கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு பெரும்பாமை கிடைக்கும் எனவும் காங்கிரஸ் கூட்டணிக்கு மிகவும் குறைந்த இடங்களே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கருத்து கணிப்புக்கள் பற்றி பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயவதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிக்க உள்ளார். அதே நேரத்தில் மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஆகியோர் இந்த கருத்துக் கணிப்பைஒரு கிசுகிசு செய்தியாகவே காண்பதாக தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

“அன்புள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு,

அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். நீங்கள் உண்மைக்கு போரிடுவதால் பயம் வேண்டாம். போலியான கருத்துக் கணிப்பை கண்டு தவறாக நடக்க வேண்டாம். உங்கள் மீதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் நம்பிக்க வைக்கவும். உங்கள் கடின உழைப்பு வீணாகாது. ஜெய்ஹிந்த்

ராகுல் காந்தி”

என பதிந்துள்ளார்.