டெல்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி தலைமையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கி  நடைபெற்று வருகிறது. காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியா சீனா பிரச்சினை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு  உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்தியா சீனா இடையேயான மோதல், பெட்ரோல் டீசல் விலை உயர்வுகள் நாட்டு மக்களிடையே பெரும் விவாதப்பொருளாகி வருகிறது. கொரோனா ஊரடங்கிலும் அதிகரித்து வரும் விலை உயர்வு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்பட நிர்வாகிகள்  பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில்,  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப் படுவதாகவும், மேலும், கொரோனா தடுப்பு பணி, அனைத்து அதிகாரங்களையும் தனது கைகளில் மையப்படுத்திய பிரதமரின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், தொற்றுநோய் தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்தும்,  மாநில அரசுகளுக்கு டுதல் நிதி வழங்கப்படுவது மற்றும் லடாக் எல்லை பிரச்சினை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.