நவம்பர் 10ம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

டெல்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 10-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் அறிவித்து உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தோல்விக்குப் பொறுபேற்ற ராகுல்காந்தி, கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, புதிய தலைவர் நியமிக்கும் பணி தொடர்ந்து வருகிறது. தகுதியான தலைவர்கள் யாரும் தலைவர் பதவி ஏற்க முன்வராத நிலையில், பிரியங்கா காந்தியையும் கட்சியின் தலைவராக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவரும் மறுத்து விடவே  முன்னாள் தலைவர் சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.