Random image

கின்னஸ் சாதனைக்கு மோடியின் பெயர் பரிந்துரை: காங்கிரஸ் கடிதம்

பனாஜி:

திக முறை வெளிநாடுகளுக்கு சென்ற  நாட்டின் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியின் பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மத்தியில் பாரதியஜனதா தலைமையிலான அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார். அவரது தொடர்  வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகள் கிண்டலும், கேலியும் வந்தனர்.

மோடி பிரதமரான பதவி வகித்து வரும் இந்த 4 ஆண்டுகளில் 52 வெளிநாடுகளுக்கு 41 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது வெளிநாட்டு பயணச்செலவு ரூ.355 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதுவே ஒரு நாட்டின் தலைவர் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு அவரது பெயரை பரிந்துரைத்து காங்.கடிதம் எழுதியுள்ளதாக  காங். செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் தெரிவித்து உள்ளார்.

கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்த சங்கல்ப், பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றவர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தினார்.