பதவியேற்று 3 ஆண்டுகள் ஆனாலும் ட்ரம்ப்பை விடாமல் விரட்டும் விசாரணைகள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் தொடர்பிருந்ததாய் கூறிய பெண்களுக்கு பணம் செட்டில் செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிப்பது சம்பந்தமாக அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016ம் ஆண்டின் பணப் பரிவர்த்தனை நடவடிக்கையில் தொடர்புடைய நபர்களிடம் சாட்சியம் பெறுவது மற்றும் விசாரணை மேற்கொள்வது ஆகியவை தொடர்பாக பிரதிநிதிகள் சபையின் நீதிபரிபாலன கமிட்டி ஏற்பாடுகளை செய்து வருகிறது.

வயது வந்தோர் சினிமா நட்சத்திரம் ஸ்டார்மி மேனியல்ஸ் மற்றும் முன்னாள் ப்ளேபாய் மாடல் கேரன் மெக்டோகல் ஆகியோருக்கு பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன்னாள் தனி வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், பணம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்திருந்த அமெரிக்க அதிபர், தனது வழக்கறிஞரை எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடுமாறு தான் அறிவுறுத்தியதில்லை என்று தெரிவித்துள்ளார்.